மத்திய ஆபிரிக்க நாடான கபூனில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அண்மையில் நடந்து முடிந்த அரசுத் தலைவர் தேர்தலில் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் - தேர்தல் முடிவுகள் மோசடியானவை என எதிர்க் கட்சிகள் தரப்பில் இருந்தும், பொதுமக்கள் மத்தியில் இருந்தும் குரல்கள் எழுந்த நிலையில் - இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட முன்னாள் அரசுத் தலைவர் ஒமர் பொங்கோ உள்ளிட்டவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இராணுவ ஆட்சியின் தலைவராக ஜெனரல் பிரிஸ் ஒலிகுயி இங்குயேமா அறிவிக்கப்பட்டுள்ளார்.
குடியரசுக் காவல் படையின் தலைவராகப் பணியாற்றிய அவரைத் தோளில் தூக்கியவாறு படையினர் தலைநகர் லிபர்வில்லில் முன்னதாகப் பவனி வந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அது மாத்திரமன்றி பொங்கோ குடும்பத்தின் நீண்ட கால ஆட்சி அகற்றப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பொதுமக்களும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதையும் அவதானிக்க முடிகின்றது.
அயல் நாடான நைஜரில் ஐந்து வாரங்களுக்கு முன்னரேயே இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றி இருந்த நிலையில் கபூனிலும் இராணுவம் ஆட்சியைப் பிடித்திருப்பது மீண்டும் இராணுவ ஆட்சியை நோக்கி ஆபிரிக்கக் கண்டம் செல்கின்றதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. அது மாத்திரமன்றி, கனிம வளங்களை அதிகளவில் கொண்ட ஆபிரிக்கக் கண்டத்தில் வறுமையில் வாழும் நிலைக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களின் குரலை மதிக்காத ஆட்சியாளர்களின் போக்குதான் இத்தகைய இராணுவ ஆட்சிக்கு உந்துதலா என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விமர்சனங்கள் அண்மைக் காலங்களில் அதிகமாக முன்வைக்கப்படுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. குறிப்பாக ஆபிரிக்காவில் உள்ள முன்னாள் குடியேற்ற நாடுகளில் பிரான்சின் அதீத தலையீடு தொடர்பில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு உள்ளன. அதேவேளை இந்த நாடுகளில் கனிம வளத் துறையில் செயற்படும் பிரான்சின் பல்தேசிய நிறுவனங்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வும் அதிகரித்து வருகின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள பிரான்சின் ஆயுதப் படையினரை வெளியேற்ற வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்து வருகின்றன.
தேர்தல் ஜனநாயகம் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஆட்சியை பலாத்காரமாக அகற்றுவது ஜனநாயக விரோதமான செயல் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட ஆட்சியாளர்கள் ஆட்சிக் கதிரையில் இருந்து கொண்டு ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்ட வேளைகளில், பொதுமக்கள் பாதிக்கப்பட்ட வேளைகளில் எழாத கண்டனக் குரல்கள், ஆட்சியில் இருந்து அவர்கள் அகற்றப்படும் வேளைகளில் மாத்திரம் உலக நாடுகளிடம் இருந்தும் உலக மன்றங்களிலும் இருந்து வருமானால் அவர்கள் யாருடைய நலனுக்காகப் பேசுகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எழும்.
கபூன் விடயத்தில் கூட பெரும்பாலான நாடுகள் ஆட்சிக் கவிழ்ப்பைக் கண்டித்துள்ளன. ஆபிரிக்க ஒன்றியத்தில் இருந்து கபூன் வெளியேற்றப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் மத்தியில் இந்த வெற்று அறிக்கைகளும், கண்டனங்களும் கண்டு கொள்ளப்படவே இல்லை. ஏலவே அட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற நைஜர் நாட்டின் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ள மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதார மன்றம் அந்த நாட்டின் மீது படையெடுப்பை மேற்கொண்டு தற்போது பதவியில் உள்ள இராணுவ ஆட்சியைப் பதவி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் பிராந்தியத்தில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றும் போக்கை எவ்வாறு புரிந்து கொள்வது என்பதில் சிக்கல் உள்ளது. பெருமளவிலான கனிம வளங்களைக் கொண்டுள்ள நாடுகளில் வறுமையில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மக்களைப் பொறுத்தவரை ஆட்சியாளர்கள் ஜனநாயக வழியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்களா அல்லது சட்ட விரோதமான முறையில் அதிகாரத்தைப் பெற்றார்களா என்பதை விடப் பாரிய பிரச்சனை தமது வறுமை நிலை நீங்க ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள், செய்கிறார்கள் என்பதுவே. இந்தக் கேள்விக்கான சரியான விடையைத் தெரிந்து கொள்ள அவர்கள் இன்னமும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கலாம். ஆனால், முன்னர் இருந்த ஆட்சியாளர்களே பரவாயில்லை என மக்கள் நினைக்கும் நிலைமை உருவாகாமல் இருப்பதே நல்லது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment