பிரித்தானியாவின் இந்தியா, இலங்கை மற்றும் இந்தியப் பெருங்கடல் (தென் ஆசியா)வலயத்துக்கான பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் துணைத் தலைவரான கமிலா சுக்டனை ( Camilla Sugden) நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் சந்தித்திருந்தார்.
இச்சந்திப்பின் போது வட கிழக்கு தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் மற்றும் கொடுத்துவரும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சாணக்கியன் ”மே மாதத்துக்கு பின்னரான இலங்கைக்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் இல்லாதவிடத்து தற்பொழுது ஒருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதனடிப்படையில் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்திக்கும் நேரம் தான் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தல் ஊர்வலத்தின் போது தாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரகுமார் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
எனவே இச்சம்பவம் சம்பந்தமாகவும் எமக்கான உரிமைகள் மறுக்கப்படுதல் மற்றும் இன முறுகலை ஏற்படுத்தும் வகையில் அரசு நடந்து கொள்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மயிலத்தமடு மாதவனை போன்ற பிரதேசங்களில் இடம்பெறும் தமிழருக்கு சொந்தமான காணி அபகரிப்பு பற்றியும் திருகோணமலை மற்றும் பல பிரதேசங்களில் இடம்பெறும் அத்துமீறிய விகாரை அமைக்கும் நடவடிக்கைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment