தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலமானார்

 



தமிழ் சினிமாவில் அபூர்வ சகோதரர்கள், அன்பே சிவம், கார்க்கி, கோலமாவு கோகிலா உள்ளிட பல படங்களில் நடித்தவர் ஆர்.எஸ்.சிவாஜி. இவர் பன்னீர் புஷ்பங்கள் என்ற துரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.


இவர் பிரபல இயக்குனர் மற்றும் நடிகராக சந்தான பாரதியின் சகோதரர் ஆவார்.

இந்த நிலையில்,  நடிகர் ஆர்.எஸ். சிவாஜி இன்று காலமானார். அவரது மறைவுக்கு  திரையுலகிலகினர் மற்றும் ரசிகர்கள்  இரங்கல் கூறி வருகின்றனர்

நடிகர் கமல்ஹாசன் தன் சமூக வலைதள பக்கத்தில்,

‘’எனது நண்பரும், சிறந்த குணச்சித்திர நடிகருமான ஆர்.எஸ். சிவாஜி மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை கொள்கிறேன். சிறிய கதாபாத்திரம் என்றாலும் ரசிகர்கள் மனதில் காலம் கடந்தும் நீடிக்கும்படியான உயிரோட்டத்தை அளிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவர். 

எங்களது ராஜ்கமல் பிலிம்ஸ் குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவே பெரிதும் அறியப்பட்டவர். அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் என் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.




Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial