என்னதான் கைக்கு மேல காசு கொட்டி கிடந்தாலும், வெற்றியை ருசித்து அதன் மூலம் அனுபவிக்கும் சந்தோசமே தனி ரகம் தான். அதாவது ரஜினி இத்தனை வருட காலமாக சம்பாதித்து வெற்றி பெற்றதை விட தற்போது நெல்சன் கூட்டணியில் கிடைத்த வெற்றி தான் மிகப்பெரிய பொக்கிஷம் என்று நினைத்து வருகிறார்.
அதற்கு காரணம் 72 வயதிலும் ஹீரோவாக நடித்து ஜெயித்து காட்டி விட்டோம் என்ற மிகப்பெரிய சந்தோசம் தான். இதை சந்தோசம் என்று சொல்வதை விட கர்வமாக கூட நினைக்கலாம். ஏனென்றால் தற்போது இருக்கும் பல போட்டிகளுக்கு நடுவில் ஜெயித்துக் காட்டியது பெரிய விஷயம் தான்.
அந்த வகையில் ஜெயிலர் படம் கிட்டத்தட்ட 600 கோடிக்கும் மேல் வசூலை பெற்று சாதனை படைத்திருக்கிறது. இது ரஜினிக்கு மட்டுமல்ல இயக்குனர் நெல்சன் மற்றும் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்-கும் அடித்த ஜாக்பாட் என்றே சொல்லலாம். அதனால் தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த வெற்றிக்கு சொந்தக்காரராக இருந்த ரஜினிக்கு கார் ஒன்றை கிப்டாக கொடுத்தார்.
ரஜினிக்கு இந்த கார் ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. ஆனால் தன்னுடைய வெற்றியின் மூலம் கிடைத்தது என்பதால் மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்து வருகிறார். அதனால் எப்பொழுது எங்கே போனாலும் சன் பிக்சர்ஸ் கொடுத்த அந்த கார்ல தான் போயிட்டு வருகிறார். அதற்கு காரணம் இந்த கார்ல போகும் போது தான் உண்மையிலேயே நாம் ஏதோ சாதித்து விட்டோம் என்ற உணர்வு ஏற்படுகிறதாம்.
அத்துடன் தற்போது தான் பணக்காரராக இருக்கிறோம் என்ற நினைப்பு வருகிறது என்று பெருமிதமாக சொல்கிறார். அந்த வகையில் ரஜினி பார்க்காத சொகுசு காரை கிடையாது என்று சொல்லலாம். ஆனாலும் இவருக்கு இந்த கார் தான் மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுத்து இருக்கிறது என்று பூரித்து போய் இருக்கிறார்.
அந்த சந்தோஷத்தில் தான் ரஜினி பெருமூச்சு விட்டு நிம்மதியாக தற்போது இருக்கிறார். இது அனைத்தும் ரஜினியால் மட்டுமே சாத்தியமாக முடியும். அதாவது நெல்சன் கூட்டணியில் ரஜினி நடிக்கிறார் என்று சொன்னதும் பலதரப்பட்ட விமர்சனங்கள் இவரை நோக்கி போனது.
ஆனால் தன் மீது இருந்த நம்பிக்கையிலும் நெல்சன் மீது வைத்த நம்பிக்கையும் தான் இவருக்கு இந்த அளவிற்கு வெற்றி கிடைத்து இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment