இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணையும் தலைவர் 171 படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
இந்நிலையில் தற்போது இந்த படம் டிராப் ஆகிவிட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது. மேலும் இதற்கு மிக முக்கிய காரணமாக ரஜினிகாந்த் தான் இருக்கிறார் என சொல்லப்படுகிறது.
உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் வெற்றிக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு லோகேஷ் உடன் படம் பண்ண வேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை இருந்தது.
பல கட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு லோகேஷும் ரஜினிக்காக படம் பண்ண ஓகே சொல்லி இருந்தார்.
இந்த தகவல் உறுதியான பிறகுதான், விக்ரம் படத்திற்கு முன்னரே லோகேஷ் கனகராஜ், ரஜினிகாந்த்தை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க அணுகிய தகவல்கள் வெளியாகி இருந்தது.
தற்போது இந்த சந்திப்பு தான் தலைவர் 171 படத்தில் இருந்து லோகேஷ் வெளியேறவும் காரணமாக அமைந்துவிட்டது. தமிழ் சினிமா ரசிகர்களை இந்த தகவல் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ், ரஜினிக்கு கதை சொல்லி அவர் மறுத்து விட்ட பிறகு தான் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார்.
இந்த படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பியதோடு கிட்டதட்ட 650 கோடி வசூல் சாதனை செய்திருக்கிறது. இந்த படத்தில் ரஜினி யாரும் எதிர்பார்க்காத ஒரு வேலையை செய்திருக்கிறார்.
அதாவது லோகேஷ் கனகராஜ் சொல்லிய கதையின் ஒரு ஸ்டண்ட் பகுதியை ரஜினி, நெல்சன் இடம் சொல்லி அதை ஜெயிலர் படத்தில் உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆன பிறகு அந்த காட்சியை பார்த்த லோகேஷ் பயங்கரமாக அப்செட் ஆகிவிட்டார். இதுதான் தலைவர் 171 லிருந்து விலக லோகேஷ் முடிவெடுத்ததன் காரணம்.
என்னதான் சூப்பர் ஸ்டாராக இருந்தாலும், அவரை வைத்து படம் பண்ணினால் கோடி கணக்கில் லாபம் அள்ளலாம் என்று இருந்தாலும், தன்னுடைய அனுமதியில்லாமல் தான் சொல்லிய கதையை இப்படி உபயோகப்படுத்தியதால், அப்படி ஒரு வெற்றியே தனக்கு வேண்டாம் என உதறி தள்ளி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment