மிகப்பெரிய இன்டஸ்ட்ரியல் ஹிட் அடித்திருக்கும் ஜெயிலர் தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கு மட்டுமல்லாமல் ரஜினிக்கும் புது உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.
இதற்கு தானே ஆசைப்பட்டேன் என்ற ரேஞ்சில் அவர் இப்போது உச்சகட்ட சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருக்கிறாராம்.
அதன் வெளிப்பாடு அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் தெரிகிறது என்கிறது திரையுலக வட்டாரம்.
அது மட்டுமல்லாமல் இந்த ஜெயிலர் வெற்றிக்கு என்ன காரணம் என்று அலசி ஆராய்ந்து பார்த்த சூப்பர் ஸ்டாருக்கு ஒரு விஷயமும் நன்றாக புரிந்து இருக்கிறது.
அதாவது சிறிது நேரமே வந்தாலும் ரசிகர்களை கலங்கடித்த சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் வரவு ஜெயிலரின் வெற்றிக்கு பக்க பலமாக இருந்தது.
அதை புரிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் தன்னுடைய அடுத்த படமான தலைவர் 170 ல் மல்டி ஸ்டார்களை இறக்க வேண்டும் என்று இயக்குனருக்கு புது கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம்.
ஏற்கனவே ஸ்கிரிப்ட் வேலைகள் அனைத்தும் முடிந்து படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நேரத்தில் தலைவர் இப்படி ஒரு கண்டிஷன் போட்டுள்ளது இயக்குனரை கொஞ்சம் பதற வைத்திருக்கிறது. ஆனாலும் இப்போது மொத்தமாக கதையை மாற்றி பல டாப் ஹீரோக்களை இழுக்கும் வேலையையும் அவர் சத்தம் இல்லாமல் செய்து வருகிறாராம்.
ஏற்கனவே அமிதாப் பச்சன், நானி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது தெலுங்கு நடிகர் ராணாவிடமும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
இதுதான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் சூப்பர் ஸ்டார் மல்டி ஸ்டார்ஸ் துணையை நம்புவதாகவும் சலசலக்கின்றனர்.
அது மட்டுமின்றி ஜெயிலர் கொடுத்த பேராசையால் தான் அவர் தலைவர் 170ல் மாற்றங்கள் செய்துள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். எது எப்படி இருந்தாலும் ஜெயிலரை விட பல மடங்கு பவராக தலைவர் 170 வரப்போகிறது என்பது மட்டும் உறுதியாகி உள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment