ஆடு பகை குட்டி உறவா என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். ஆனால் இங்கு குட்டி பகை, ஆடு உறவு என்ற கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. அண்மைக்காலமாகவே சூப்பர் ஸ்டார் வீட்டு பிரச்சனை தான் மீடியாவில் பலவிதமாக பேசப்பட்டு வருகிறது.
அதிலும் தனுஷ், ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்து முடிவை வெளியிட்டதிலிருந்து பல யூகங்கள் கிளம்பி கொண்டிருக்கிறது. ஆனாலும் தனுஷ் எப்பவுமே நான் தலைவரின் ரசிகன் தான் என்பதை பலமுறை நிரூபித்திருக்கிறார். அப்படித்தான் தற்போது ஜெயிலர் பற்றியும் அவர் ஒரு ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடித்துள்ள இப்படம் வரும் 10-ம் தேதி ரசிகர்களின் பார்வைக்கு வர இருக்கிறது. இதற்காகவே பல மாதங்களாக காத்திருக்கும் ரசிகர்கள் இப்போது படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர்
இந்த சூழலில் தனுஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது ஜெயிலர் வாரம் என்று சிரிக்கும் எமோஜி பொம்மைகளை பதிவிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் குடும்பத்திற்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் ரஜினியின் ரசிகன் என்பதை தனுஷ் நிரூபித்து விட்டதாக புகழ்ந்து வருகின்றனர்.
உண்மையில் தனுஷின் சமீப கால நடவடிக்கைகள் அனைத்தும் ரஜினியை போன்றே இருப்பதாக பலரும் பேசி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அவருடைய பேச்சு, நடவடிக்கை கூட ரொம்பவும் பக்குவமாகவும், மனமுதிர்ச்சியாகவும் இருப்பதை பல மேடைகளில் நாம் பார்த்திருக்கிறோம்.
Post a Comment