கியூபாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு!

 



கியூபாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள க்ரூப் ஒப் 77 ப்ளஸ் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான கியூபா தூதுவர் அன்ரஸ் மார்செலோ கொன்ஷாலிஸ் (Andrés Marcelo González) கியூபா ஜனாதிபதி மிகுல் டயஸ் கெனலின் (Miguel Díaz-Canel) அழைப்புக் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

‘வளர்ச்சியின் தற்போதைய சவால்கள் : அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு’ என்ற தொனிப்பொருளின் கீழ் எதிர்வரும் செப்டம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் Group of 77 (G77) plus China உச்சி மாநாடு கியூபாவில் நடைபெற உள்ளது.

1964 ஆம் ஆண்டு சீனாவினால் நிறுவப்பட்ட G77 அமைப்பில் 134 நாடுகள் கூட்டணியாகவுள்ளது.
இந்த அமைப்பானது அதன் உறுப்பு நாடுகளின் கூட்டுப் பொருளாதார நலன்களை ஊக்குவிக்கும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டது.

உலக மக்கள்தொகையில் 80 வீதத்தையும், ஐ.நாவின் உறுப்பு நாடுகளில் மூன்றில் இரண்டு பங்கையும் பிரதிநிதித்துவப்படுத்தும் G77 பிளஸ் கூட்டமைப்பு, கூட்டணி நாடுகளின் வளர்ச்சி குறித்து கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பையும் கொண்டுள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial