தளபதி விஜய்க்கு தமிழில் இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ஒருவர் திடீரென மரணம் அடைந்து இருக்கிறார். இவருடைய மரணம் சினிமா உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. ரசிகர்களும், பல சினிமா பிரபலங்களும் இவருடைய இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
பாப்பன் பிரியபேட்டை பாப்பன் என்னும் படத்தின் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் சித்திக். இவர் மலையாள இயக்குனராக இருந்தாலும் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் சிறந்த படங்களை கொடுத்து அங்கேயும் தனக்கான அடையாளத்தை உருவாக்கியவர். சிறந்த இயக்குனர்களின் லிஸ்டில் இவரும் ஒருவர்.
இயக்குனர் சித்திக் தளபதி விஜய்க்கு முதன் முதலில் கொடுத்த படம் பிரண்ட்ஸ். இந்த படம் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு படமாக இருக்கிறது. பிரண்ட்ஸ் படத்தின் காமெடி காட்சிகள் இன்று வரை பிரபலமாக இருப்பதற்கு சித்திக் தான் மிக முக்கிய காரணம். விஜய், சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்கள் இருந்த அந்த படத்தில், வடிவேலுக்கு சரியான கேரக்டரை கொடுத்து காமெடியில் ஜெயித்திருப்பார்.
அதன்பின்னர் விஜய்க்கு ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தொடர்ந்து படங்கள் தோல்வி அடைந்த பொழுது, தமிழ் சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு பாலிவுட்டுக்கு சென்றிருந்த அசினை மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வரவைத்து, விஜய்க்கு காவலன் என்னும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்திருந்தார் இயக்குனர் சித்திக்.
அதேபோன்று கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு எங்கள் அண்ணா என்னும் படத்தை கொடுத்து வெற்றி பெற்றிருந்தார்.
இதேபோன்று பல வெற்றி படங்களை கொடுத்த சித்திக் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாக நேற்று செய்திகள் வெளியாகி இருந்தது.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து இயக்குனர் சித்திக் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். இவர் ஏற்கனவே கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தார். இவருடைய மறைவு இப்போது சினிமா உலகிற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment