சினிமாவில் டாப் நடிகரின் நடிகைகளை போலவே இசையமைப்பாளர்களும் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதிலும் முன்னணி இசையமைப்பாளர்கள் ஐந்து பேரின் சம்பளம் சமீப காலத்தில் டாப் கீரில் எகிறி இருக்கிறது.
இளையராஜா: தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜா.
மேலும் திரை உலகில் மேற்கத்திய பாரம்பரிய இசையைப் புகுத்தியவர்களில் இளையராஜாவுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இதனாலேயே இவரை ஞானி என்றும் அழைப்பார்கள். 80களில் மட்டுமல்ல இப்போதும் 2k கிட்ஸ் விரும்பும் வகையில் ட்ரெண்டிங் பாடல்களை இளையராஜா கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
யுவன் சங்கர் ராஜா: இசைஞானி இளையராஜாவின் வாரிசான யுவன் சங்கர் ராஜா, இளைஞர்களுக்கு பிடித்தமான இசையமைப்பாளர்கள் ஒருவர். அதிலும் ரொமான்டிக், காதல், லவ் பெயிலியர் என இளசுகளுக்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் டானிக் கொடுப்பது போல் இவருடைய பாடல்கள் அமையும். யுவன் சங்கர் ராஜா ஒரு படத்திற்காக 3 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்.
தமன்:தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட்தமிழ் மற்றும் தெலுங்கில் சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் தமன். இவர் துள்ளல் மிகுந்த பாடல்களை பாடியும் இசையமைத்தும் இளசுகளை வசியம் செய்து வருகிறார் இவர் ஒரு படத்திற்காக மூன்று கோடி சம்பளம் வாங்குகிறார்.
ஏஆர் ரகுமான்: தமிழ் சினிமாவின் ஆஸ்கார் நாயகனாக பார்க்கப்படும் ஏஆர் ரகுமான் 90களில் இருந்து இப்போது வரை இளசுகளை வசியம் செய்யும் வகையில் ஒவ்வொரு படங்களிலும் சூப்பர் ஹிட் பாடலை கொடுத்துக் கொண்டிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு மட்டும் 5 கோடியை சம்பளமாக பெறுகிறார்.
அனிருத்: வெறும் 32 வயதில் இப்படிப்பட்ட வளர்ச்சி என திரையுலகையே வியந்து பார்க்க வைக்கும் இசையமைப்பாளர்களுள் ஒருவர்தான் அனிருத். இவர் தற்சமயம் இருக்கும் டாப் நடிகர்களான ரஜினி, அஜித், விஜய் போன்றோரின் படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.
அதிலும் இவருடைய பாடல்கள் எல்லாம் இளைஞர்களை குதூகலப்படுத்தும் வகையில் இருப்பது தான் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. அனிருத் ஒரு படத்திற்கு இசையமைப்பதற்கு மட்டும் 7 கோடி சம்பளம் வாங்குகிறார். இதனால் ஒரு படத்தை முடித்துவிட்டு அனிருத் வெளிநாடுகளில் ஆடம்பரத்தில் உச்சம் தொடும் அளவுக்கு சொகுசாக பொழுதை கழித்து விட்டு தான் மறுபடியும் இந்தியா திரும்புவார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment