இந்தியாவிடம் உதவி கோரும் IMF

 


இந்தியாவின் வட மாநிலங்களில் அண்மைக்காலமாகப் பெய்து வரும்  கடும் மழை காரணமாக அங்கு நெல் உற்பத்தி பெரிதும்  பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் விதமாக  மத்திய அரசு, பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது.

இதனால் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேயா உள்ளிட்ட உலக   நாடுகளில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு அதன் விலையும் உயர்வடைந்துள்ளதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசி வாங்க மக்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்நிலையில் குறித்த ஏற்றுமதித்  தடையை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியம்(IMF)  இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் பியர்-ஒலிவியர் கோரின்சாஸ் (Pierre-Olivier Gourinchas)கருத்துத் தெரிவிக்கையில் இந்தியாவின் அரிசி ஏற்றுமதி தடையால் உலகம் முழுவதும் உணவு பண்டங்களின் விலை உயரும். சில நாடுகள் எதிர்வினை நடவடிக்கைகளையும் எடுக்கலாம்.

எனவே இத்தடையை நீக்கக்  கோருகிறோம். 2022-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்திய பொருளாதாரம் சற்று இறங்கி இருந்தாலும், ஒரு வலிமையான வளர்ச்சி தென்படுகிறது. எனவே இத் தடையானது  தேவையற்றது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial