வடிவேலு ரெட் கார்ட் தடை நீங்கி சினிமாவில் நடிக்க வந்த சூழலில் அவர் ஹீரோவாக நடித்த நாய் சேகர் ரிட்டன்ஸ் படம் மண்ணை கவ்வியது. இந்நிலையில் காமெடி நடிகராக சந்திரமுகி 2 போன்ற ஒரு சில படங்களில் வடிவேலு நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் மாமன்னன்.
இந்த படத்தில் கதாநாயகன் உதயநிதியாக இருந்தாலும் கதையின் நாயகன் அதாவது மாமன்னனாக வடிவேலு தான் நடித்திருந்தார். இவருக்குள் இப்படி ஒரு நடிப்பு திறமை இருக்கிறதா என அனைவரையுமே மிரள செய்து விட்டார். ஏனென்றால் வடிவேலுக்கு காமெடி கைவந்த கலை என்பதை எல்லோருக்குமே தெரியும்.
ஆனால் ஒரு உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரத்தில் முதல்முறையாக வடிவேலு நடித்து அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.
இப்போது மாமன்னனால் வைகைப்புயலுக்கு மீண்டும் தமிழ் சினிமாவில் வாழ்வு வந்திருக்கிறது. அதாவது இப்போது அவருக்கு கதாநாயகனாக மட்டுமே பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.
அதுவும் இத்தாலி ரீமேக் ஆன “The Life Is Beautiful” என்ற படத்தில் வடிவேலு நடிக்க இருக்கிறார். இந்த படத்தையும் இயக்குனர் மாரி செல்வராஜ் தான் இயக்க இருக்கிறாராம். இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
வடிவேலு இப்போது மாமன்னன் படத்தின் மூலம் தனது செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியுள்ளார். நாய் சேகர் படத்தில் மிகுந்த அடி வாங்கியதால் இனி ஹீரோ கதாபாத்திரமே வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தார். ஆனால் மாமன்னன் அவரை வேறு ஒரு உருவாக மாற்றி விட்டது.
மாரி செல்வராஜ் தவிர மற்ற சில இயக்குனர்களும் வடிவேலுவை கதாநாயகனாக வைத்து படம் இயக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் இப்போது காமெடி நடிகர்களை தாண்டி ஹீரோக்களுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறார் வடிவேலு. இனி தான் வைகை புயல் வடிவேலுவின் ஆட்டம் தொடங்க இருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment