அதிரடியாக டிக்கெட் விலையை ஏற்றிய தியேட்டர் ஓனர்ஸ்..

 



கோவிட் தொற்றுக்குப் பிறகு ஓடிடி நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. அதாவது கொரோனா காலகட்டத்தில் படப்பிடிப்பு தடைப்பட்டது. 

அதுமட்டுமின்றி எடுத்த படங்களையும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் அவதிப்பட்டனர். அந்த சமயத்தில் தான் ஓடிடி நிறுவனங்கள் அந்த படங்களை வாங்கி வெளியிட்டது.

பெரிய நடிகர்களின் படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்காக காத்திருந்தது. ஏனென்றால் அவர்களின் ரசிகர்கள் படத்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இதை தியேட்டர் ஓனர்கள் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு டிக்கெட் விலைகளை அதிகப்படியாக உயர்த்தி உள்ளனர்.

இப்போது அவர்கள் உயர்த்தி இருக்கும் விலையை பார்த்தால் தலையையே சுற்றுகிறது. அதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர் களில் டிக்கெட் விலை 250,ஏசி இல்லா தியேட்டர்களில் 150 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக டவுன் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள தியேட்டர்களில் 200 மற்றும் ஏசி இல்லாத தியேட்டர்களில் 120 விலை போடப்பட்டுள்ளது.

அடுத்ததாக IMAX திரையரங்குகளில் ஒரு படத்திற்கு டிக்கெட் விலை 450 என அதிரடியாக உயர்த்தி உள்ளனர். மேலும் அடுத்ததாக EPIQ தியேட்டர்களில் ஒரு டிக்கெட்டின் விலை 400 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக Recliner இருக்கைகளுக்கு 350 ரூபாய் என தியேட்டர் ஓனர்ஸ் அதிகரித்து இருக்கிறார்கள்.

இதை அறிந்த சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். பொழுதுபோக்குக்காக ஆரம்பத்தில் சினிமா உருவாக்கப்பட்ட நிலையில் கொள்ளை லாபம் அடிக்கும் தொழிலாக திரையரங்கு மாறி உள்ளது. இப்படியே அதிகரித்துக் கொண்டு போனால் தினக்கூலி தொழிலாளர்கள் தியேட்டருக்கு வருவது எட்டாக்கனியாக மாறிவிடும்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்




www.akswisstamilfm.com

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉

www.akswisstamilmedia.com

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial