நாளுக்கு நாள் குறையும் தங்கத்தின் விலை!



 ஆபரணத் தங்கத்தின் விலை சமீப காலமாக குறைந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.


இன்றைய தங்கம் விலை

ஆபணத் தங்கத்தின் விலை சில தினங்களில் அதிகரித்தும் பெரும்பாலான நாட்களில் குறைந்தும் வருகின்றது. இன்று சவரனுக்கு 80 ரூபாய் குறைந்துள்ளது. நேற்றைய தினத்தில் கிராம் ரூ.5,590ஆகவும், சவரன், ரூ.44,720 ஆகவும் இருந்து வந்தது.


இந்நிலையில் சென்னையில் இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து,, 5,580 ரூபாயாகவும், சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 44 ஆயிரத்து 640 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.


கடந்த வாரங்களில் 45 ஆயிரத்தை தொட்ட தங்கத்தின் விலை தற்போது சில நாட்களாக கடகடவென சரிந்துள்ளது பாமர மக்களிடையே மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதா என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial