சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர் குப்பத்தைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரனுக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி அன்று வெகு விமரிசையாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இந்நிலையில், இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள கடலில் இருவரும் மோட்டார் போட்டில் சென்றபோது போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர்.
அப்போது, கட்டுப்பாட்டை இழந்த இருவரும் திடீரென படகில் இருந்து விழுந்து நீரில் மூழ்கினர். இதையடுத்து அங்கு இருந்தவர்கள் தம்பதியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், லோகேஸ்வரன் சடலமாக மட்டுமே கிடைத்துள்ளார். விபூஷ்னியாவின் உடலை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக இந்திய, தமிழக அரசு மற்றும் அவர்களது குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இருவரின் சடலங்களை இந்தியாவிற்கு எடுத்து வருவது தொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருமணமான 10 நாளில் மருத்துவ தம்பதி உயிரிழந்திருக்கும் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment