நடிகர்களை மிஞ்சி இப்போது இயக்குனர்களும் கோடிகளில் சம்பளம் வாங்க வேண்டும் என அடுத்தடுத்த படங்களில் பல மடங்கு சம்பளத்தை உயர்த்தி கொண்டே போகின்றனர்.
அதிலும் ஒரு ஹிட் கொடுத்துவிட்டு அந்த ஹிட்டை வைத்து நான்கு வருடத்திற்கு பின்னும் 4 கோடி வரை சம்பளம் கேட்கிறார் இயக்குனர் ஒருவர்.
பெரிய இயக்குனராக இருந்தாலும் பரவாயில்லை வளர்ந்து வரும் இயக்குனராக இருந்து கொண்டு தாறுமாறாக சம்பளம் கேட்பதால், பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனத்தையே தலை தெறிக்க ஓட வைத்திருக்கிறார். இயக்குனர் கார்த்திக் தங்கவேலு லைக்கா-விடம் கதை சொல்லி சம்மதம் பெற்றுள்ளார்.
சரி எங்கள் கைவசம் ஹீரோ நிறைய பேர் இருக்கிறார்கள் யாரையாவது ஒருவரை செலக்ட் செய்து விடலாம் என லைக்கா உத்தரவாதம் கொடுத்துள்ளனர். லைக்கா நிறுவனத்திடம் கார்த்திக் தங்கவேலு நினைத்துப் பார்க்க கூட முடியாத அளவுக்கு சம்பளம் கேட்டு இருக்கிறார்.
ஜெயம் ரவியை வைத்து அடங்கமறு என சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் கார்த்திக் தங்கவேலு. ஒரு படத்தை மட்டும் ஹிட் கொடுத்துவிட்டு வளரும் இயக்குனராக இருக்கும் கார்த்திக் தங்கவேலு 4 கோடி சம்பளம் வேண்டும் என்று கராராக பேரம் பேசி உள்ளார்.
ஏற்கனவே ஐடி ரைடில் மாட்டி சிக்கி தவிக்கும் லைக்கா நிறுவனத்துடைய பணப்புழக்கத்தை எல்லாம் அமலாக்கத்துறை முடக்கி இருக்கிறது. இந்த சூழ்நிலை எப்படி சமாளிப்பது என தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கும் லைக்காவிடம் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு கேட்ட சம்பளத்திற்கு ஐடி ரைடே பரவாயில்லை என எஸ்கேப் ஆகி உள்ளது.
லைக்கா பிடி கொடுக்காததால் அடுத்ததாக பைவ் ஸ்டார் கதிரவன் தயாரிக்கும் திரில்லர் படத்தை விஷால் நடிப்பில் கார்த்திக் தங்கவேலு இயக்குவதற்கான முன்கள பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் படப்பிடிப்பும் துவங்கப் போகிறது. ஆனால் இந்த படத்திற்கு கார்த்திக் தங்கவேலு எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதை சஸ்பென்ஸ் ஆகவே வைத்துள்ளனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment