ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியாக களமிறக்கும் வாரிசு இசையமைப்பாளர்..

 



1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகெங்கும் கோடான கோடி ரசிகர்களை பெற்றுள்ளார்.

 இவரது இசைக்கு நிகர் வேறு யாருமில்லை என்று சொல்லும் அளவிற்கு இவர் இசையமைத்த அத்தனை பாடல்களும் செம ஹிட்டாகும்.

அந்த வகையில் இவரது இசைக்கு போட்டியாக பல இசையமைப்பாளர்கள் களமிறங்கிய வண்ணம் உள்ள நிலையில், இந்தாண்டு மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 5 படங்கள் வீதம் தமிழில் ரிலீஸாகவுள்ளது. இதனிடையே இவரது இடத்தை பிடிக்க வாரிசு இசையமைப்பாளர் ஒருவர் களமிறங்கியுள்ளார். ஏற்கனவே இவரது அக்கா மகன் ஜி.வி பிரகாஷ், இசைஞானியின் இளையமகன் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்டோர் இசையமைப்பாளர்களாக தமிழ் சினிமாவில் உள்ளனர்.

இவர்களை தொடர்ந்து பெண் வாரிசு இசையமைப்பாளர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு போட்டியாக களமிறங்க உள்ளார். தமிழில் வெளியான சில்லுக்கருப்பட்டி, ஏலே உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஹலிதா ஷமீம் தனது அடுத்த படத்தை இயக்கி வருகிறார். 7 வருடங்களுக்கு முன்பே பள்ளிப் பருவ குழந்தை நட்சத்திரங்களை வைத்து மின்மினி என்ற படத்தை இயக்கினார்.

இப்படத்தின் தொடர்ச்சியை தான் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு ஹலிதா ஷமீம் இயக்கி வருகிறார். ஏற்கனவே இப்படத்தின் முதற்கட்ட படபிடிப்பு முடிவடைந்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதற்கான காரணம் இப்படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் 7 வருடங்கள் வளர்ந்த பின் அவர்களை வைத்தே மின்மினி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை எடுக்க இயக்குனர் ஹலிதா ஷமீம் திட்டம் தீட்டியிருந்தார்.

அதன்படி தற்போது இவர் இயக்கி வரும் மின்மினி படத்திற்கு இசையமைக்க வாரிசு இசையமைப்பாளர் ஒருவர் அறிமுகமாகவுள்ளார். ஏ ஆர். ரஹ்மானின் மகளான பாடகி கதீஜா தான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான எந்திரன், பொன்னியின் செல்வன் 2 உள்ளிட்ட படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

அந்த வகையில் தற்போது தந்தையின் இடத்தை பிடிக்க கதிஜா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சியாக உள்ளது. கடந்தாண்டு இவருக்கு திருமணமான நிலையில், தற்போது தந்தையை போல இசையமைப்பாளர் பணியில் அமர முடிவெடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் பெண் இசையமைப்பாளர்களுக்கு பஞ்சம் உள்ள நிலையில், மின்மினி படத்தில் கதீஜாவின் இசையை கேட்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial