நடிக்க வந்த காலத்திலிருந்து ஏராளமான சர்ச்சைகளை சந்தித்து வந்த சிம்பு இப்போதுதான் தனக்கென ஒரு ரூட்டை பிடித்து சென்று கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் ஆப்பு வைப்பது போல் பல சம்பவங்கள் அரங்கேறி கொண்டு இருக்கிறது. அந்த வகையில் காசிக்கு போனாலும் கருமம் தொலையல என்ற நிலையில் சிம்பு இருக்கிறார்.
ஏனென்றால் சமீப காலமாக அவர் தன்னுடைய சேட்டை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு நல்ல பிள்ளையாக நடித்து வந்தார். அதிலும் கமல் தயாரிப்பில் இவர் நடிக்க இருக்கும் அறிவிப்பு வெளிவந்து பயங்கர எதிர்பார்ப்பை உண்டு படுத்தியிருந்தது. அதற்காக இவர் தன்னுடைய தோற்றத்தை எல்லாம் மாற்றும் முயற்சியில் இருந்தார்.
ஆனால் இப்போது அதெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் போகும் நிலைக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் சிம்புவுக்கு இப்போது ரெட் கார்டு கொடுக்கும் முடிவில் தயாரிப்பாளர் சங்கம் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சிம்புவை வைத்து வெந்து தணிந்தது காடு படத்தை எடுத்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தான்.
இவருடைய நிறுவனத்திற்காக சிம்பு கொரோனா குமார் என்ற படம் நடிக்க இருந்தார். ஆனால் சில பல காரணங்களால் சிம்பு அப்படத்திற்கு கால்ஷூட் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டே வந்திருக்கிறார். சமரச பேச்சுவார்த்தை ஒத்து வராததால் தான் இந்த விவகாரம் ரெட் கார்டு போடும் அளவுக்கு சென்று இருக்கிறது.
மேலும் சிம்பு கமல் தயாரிப்பில் படம் என்றதும் உடனே அதற்கு முக்கியத்துவம் கொடுத்து விட்டதாகவும் பேசப்பட்டு வருகிறது. இதுதான் இந்த பிரச்சனைக்கு மூல காரணமாகவும் இருக்கிறது. இதை தெரிந்து கொண்ட கமலின் நண்பரான மகேந்திரன் உங்கள் பிரச்சினையை முடித்துவிட்டு அப்புறம் வாருங்கள் என சிம்புவிடம் கூறிவிட்டாராம்.
கமலும் தற்போது இதிலிருந்து ஜகா வாங்கும் முடிவில் தான் உள்ளாராம். அந்த வகையில் இப்படம் தொடங்கப்படுமா இல்லையா என்ற ஒரு சந்தேகமும் எழுந்துள்ளது. இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சிம்புவை தொடரும் சர்ச்சைகளால் அவருடைய ரசிகர்கள் தான் வருத்தத்தில் இருக்கின்றனர்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment