விஜய் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு அதனுடைய அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளிவந்து இவருடைய ரசிகர்களை குஜால் படுத்திக் கொண்டிருக்கிறது.
அதிலும் நேற்று இவருடைய பிறந்த நாளை ஒட்டி வெளிவந்த பாடல் நாலா பக்கமும் திக்குமுக்காடி திணறடித்துக் கொண்டிருக்கிறது.
அடுத்ததாக விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிப்பதற்கு கமிட்டாய் இருக்கிறார். இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
[மேலும் இப்படத்தில் ஏதாவது ஒரு விஷயங்கள் லீக் ஆகுமா என்று வெங்கட் பிரபுவை பார்ப்பவர்கள் அனைவரும் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதனால் எல்லாத்தையும் அடக்கிக் கொண்டு மூச்சு விடாமல் வெங்கட் பிரபு சுற்றிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் ஏற்கனவே ஒரு சில வதந்திகள் வெளியே வந்ததால் விஜய் இவரை கூப்பிட்டு கண்டித்திருக்கிறார். அதனாலேயே ரொம்பவே அடக்கி வாசிக்கிறார் வெங்கட் பிரபு.
மேலும் லியோ படத்தின் படப்பிடிப்பு ஆல்மோஸ்ட் எல்லா வேலைகளும் முடிந்த நிலையில் அடுத்ததாக விஜய்யின் கவனம் நம்ம பக்கம் திரும்பும் என்று ஒருவித பதட்டத்துடனே வெங்கட் பிரபு இருந்து கொண்டிருந்தார். அதுவும் இவருடைய பிறந்தநாள் அன்று படத்தின் பூஜையை ஆரம்பிக்கலாமா என்று சொல்லிவிடுவாரோ என்ற பரபரப்பில் இருந்தார்.
ஆனால் விஜய் அதைப்பற்றி எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தாமல் சைலண்டாக இருந்து விட்டார். இதனால் வெங்கட் பிரபுக்கு இந்த ஒரு விஷயம் சாதகமாக முடிந்து விட்டது. எதற்கு என்றால் இன்னும் தளபதி 68 படத்தின் ஸ்டோரி டிஸ்கஷன் முழுமையாக முடியவில்லை.
அதனால் ரொம்பவே பயத்தில் இருந்த வெங்கட் பிரபு இப்பதான் பெருமூச்சு விட்டு நிம்மதியாக இருக்கிறார்.
இவருடைய நிலைமையைப் பார்த்தால் இவரை நம்பி இறங்கலாமா வேண்டாமா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. ஆரம்பிக்கும் முன்பே இவ்வளவு குழப்பத்தில் இருக்கிறார். தளபதி 68 எந்த மாதிரியான பிரச்சனைகளை எல்லாம் மேற்கொள்ள போகிறது என்று பார்க்கலாம் .
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment