ரஜினி நடிப்பில் வெளிவர இருக்கும் ஜெயிலர் மற்றும் லால் சலாம் படப்பிடிப்பு முடியும் தருவாயில் இருப்பதால் இவருடைய அடுத்த படத்திற்கான விஷயங்களில் களமிறங்கி விட்டார். அதாவது ஜெய் பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் ரஜினிகாந்த் புது கூட்டணி வைத்திருக்கிறார்.
ஏற்கனவே நெல்சன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்கில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது இவர் நடிக்க இருக்கும் படத்தில் பாலிவுட் ஸ்டாரை களம் இறக்க இருக்கிறார்.
அதாவது இந்த படத்திற்கு வில்லன் கதாபாத்திரத்தில் பொருந்தக் கூடியவராக சூர்யா மற்றும் விக்ரமிடம் பேசப்பட்டது. ஆனால் அது அப்படியே கிடப்பில் இருந்த நிலையில் தற்போது இவர்களுக்கு பதிலாக பாலிவுட் நடிகரை அணுகி இருக்கிறார்கள். அவரும் இந்த கதையை கேட்ட பின்பு ரஜினிக்காக நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டார்.
அவர் தமிழில் நேரடியாக நடிக்கும் முதல் திரைப்படம் இதுதான். அத்துடன் இவர் ஏற்கனவே ரஜினியுடன் 32 வருடங்களுக்கு முன் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இத்தனை ஆண்டுகளுக்கு அடுத்து ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
அத்துடன் விக்ரம் மற்றும் சூர்யா கதாபாத்திரத்துக்கு பதிலாக இவர் என்றால் அது வெறித்தனமான வில்லன் கதாபாத்திரம் தான். அப்படி இந்த கேரக்டரில் நடிக்கப்போவது யார் என்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆன அமிதாப்பச்சன் தான். ரஜினி மற்றும் அமிதாப் பச்சன் 1991 ஆம் ஆண்டு வெளியான ஹம் படத்திற்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கும் படம் இதுதான்.
அதனால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்க இருக்கிறார். தற்போது ரஜினி, அமிதாப்பச்சன் முடிவான நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் யார் என்பதை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் வெளியிடுவார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment