மனோபாலாவை ஒரு காமெடி நடிகராக தெரிந்த பலருக்கும் அவரை ஒரு இயக்குனராக அவ்வளவாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவர் தமிழில் 40 படங்களை இயக்கியிருக்கிறார்.
மேலும் 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியிருக்கிறார். பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்த மனோபாலா பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.
அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஊர்க்காவலன் திரைப்படமும் ஒன்று.
பின்னர் அவ்வப்போது சின்ன சின்ன கேரக்டர்களில் சினிமாவில் தலை காட்டி வந்த இவர் காமெடி நடிகராகவும் அவதாரம் எடுத்தார்.
விவேக், வடிவேலு, சந்தானத்திற்கு இணையாக நகைச்சுவையில் பட்டையை கிளப்பக்கூடிய மனோபாலா, எல்லோரிடமும் நட்புடன் பழகக்கூடிய குணமுடையவர். பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் கூட ரொம்பவும் நகைச்சுவையாகவும், எளிமையாகவும் இவர் பேசுவார்.
ரஜினிகாந்த், கமலஹாசன், சத்யராஜ் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் நடித்த அவர் இன்றைய இளம் கதாநாயகர்களாக இருக்கும் விமல், மிர்ச்சி சிவா, தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுடனும் நடிப்பில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
மிர்ச்சி சிவா நடித்த தமிழ் படத்தில் மனோபாலா காமெடி காட்சிகளில் பயங்கரமாக அசத்தியிருப்பார். மேலும் அந்த ஹீரோக்களுடனும் அன்பாக பழகும் குணமுடையவர்.
எப்போதுமே ரொம்ப ஸ்டைலிஷ் ஆக உடை அணியக்கூடிய மனோபாலா, சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி புகைப்படங்களை பகிர்வது, ஏதேனும் கருத்துக்களை பகிர்வது என தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்வார்.
இந்நிலையில் இன்று அவர் மரணம் அடைந்த செய்தி கேட்டபின் அவருடைய கடைசி சமூக வலைதள பதிவை நெட்டிசன்கள் தற்போது வைரல் ஆக்கி வருகிறார்கள்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment