உள்நாட்டு யுத்தத்தின் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ய பாதுகாப்பு படை வீரர்களை நினைவு கூரும் 14ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.
பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீஜயவர்தனபுர நினைவு தூபிக்கருகில் வெள்ளிக்கிழமை (19) மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன , சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா , முப்படை தளபதிகள் , பாதுகாப்பு செயலாளர் , பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா , போரில் உயிர் நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
படை வீரர் சேவைகள் அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய படை வீரர் விழாவிற்கு கௌரவத்தை வழங்கும் வகையில் முப்படைய வீரர்கள் , ஓய்வு பெற்ற படை வீரர்கள் , பாடசாலை சாரணர் படையினரின் , உயிர் நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் மரியாதை அணி வகுப்பு இடம்பெற்றது.
மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதையடுத்து , சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து போர் களத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரை நினைவு கூறும் வாசகம் வாசிக்கப்பட்டது.
'எமது நாட்டின் இறையான்மை, சுயாதீனத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான பாரிய போராட்டத்துக்கு பங்களிப்பையும் பலத்தையும் வழங்கிய , இராணுவ , கடற்படை , விமானப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களை கௌரவத்துடன் நினைவு கூர்வோம்.
படை வீரர்களே , உயிரை தியாகம் செய்து நீங்கள் செய்த அர்ப்பணிப்பினை எதிர்கால சந்தியினருக்காக பாதுகாப்போம் என்று இந்த நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி சபதமெடுப்போம். எமது உயிர் இருக்கும் வரை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் உங்களை நினைவு கூர்வோம். ' என்று குறித்த வாசகம் வாசிக்கப்பட்டது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment