விஜய் மற்றும் அட்லீயின் ரிலேஷன்ஷிப் எப்படி இருக்கும் என்று அனைவரும் அறிந்ததே. இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாகவும், நெருங்கிய சகோதரர்களாகவும் ஒன்றோடு ஒன்று இணைந்து இருந்தார்கள்.
அதிலும் விஜய்க்கு சினிமா கேரியரில் மிக திருப்புமுனையாக மெகா ஹிட் படத்தை கொடுத்த தெறி, மெர்சல், பிகில் இதன் மூலம் இவர்கள் இருவரும் ரொம்பவே நெருங்கி விட்டார்கள்.
அந்த அளவிற்கு இருவரும் இணைபிரியாத ஒருவராக வந்தார்கள். இதற்கு அடுத்தும் விஜய்யை வைத்து படத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அட்லீ, பாலிவுட்டில் மையம் கொண்டிருக்கிறார்.
அங்கே ஷாருக்கான வைத்து ஜவான் படத்தை உருவாக்கினார். அட்லீஸ்ட் இப்படத்தை முடித்த பிறகாவது தமிழில் வந்து விஜய்யுடன் கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்த்து நிலையில் அங்கேயே வீடு வாங்கி செட்டில் ஆகுற அளவிற்கு போய்விட்டார்.
\ஜவான் படத்தை முடித்துவிட்டு ஹிந்தியில் தெறி படத்தை டைரக்ட் செய்யும் இயக்குனருக்கு உதவி செய்து வருகிறார். அதனால் இவருடைய முழு கவனமும் அதில் மட்டும் தான் தற்போது இருக்கிறது.
அதனால் விஜய்யை வைத்து படத்தை இயக்க முடியாமல் தள்ளிக் கொண்டே போகிறது. அதற்கு ஏற்ற மாதிரி அட்லீ இடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் விஜய் தற்போது அவருடைய 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் இணைகிறார்.
அதே மாதிரி இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் விஜய் இடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறது. அதாவது அட்லீ இப்பொழுது வேண்டாம் ஏற்கனவே பிகில் படத்தில் எனக்கு நிறைய செலவை இழுத்து விட்டு விட்டார். அவர் சொன்ன பட்ஜெட்டில் இருந்து ஓவராக பண்ணிட்டார். அதனால் அவர் வேண்டவே வேண்டாம் என்று மன்றாடி இருக்கிறார்.
அதனால் விஜய்யும் அவருடைய படத்தை வெங்கட் பிரபுவே இயக்கட்டும் என்று தீர்மானமாக முடிவெடுத்து விட்டார். இவர் அந்த அளவுக்கு பட்ஜெட் தாண்டி போகமாட்டார் அதே நேரத்தில் இவர் தமிழில் கொடுத்த மெகா ஹிட் படமும் பெரிய லாபம் தான் அடைந்திருக்கிறது. இதெல்லாம் வைத்து ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது மிகவும் நிம்மதி அடைந்து இருக்கிறது.
மேலும் விஜய், லியோ படத்தை முடித்த கையோடு தளபதியின் 68வது படத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்படும். அடுத்ததாக இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க போவதாக தகவல் வெளியாயிருக்கிறது.
இதில் என்ன சந்தேகம் இருக்கப் போகிறது வெங்கட் பிரபு என்றாலே ரெண்டு விஷயம் இருக்கும். ஒன்று யுவன் சங்கர் ராஜா மற்றொன்று பிரேம்ஜி. மேலும் இது குறித்து அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியிடப்படும்.
Post a Comment