ஜூன் 15ல் சென்னை வருகிறார் ஜனாதிபதி
சென்னை, கிண்டியில் 230 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் கருணாநிதி பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை, ஜூன் 5ல், ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதைத் தொடர்ந்து நடக்கும் கருணாநிதி நுாற்றாண்டு துவக்க விழாவிலும் அவர் பங்கேற்பதாக இருந்தது.
இந்த நிலையில் ஜூன் 5ல் நடைபெறும் இந்த நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்க மாட்டார் என சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஜனாதிபதியை வைத்து வேறு தேதியில் திறக்கலாமா அல்லது வேறு தலைவரை அழைக்கலாமா என ஆலோசிக்கப்பட்டது.
இந்த நிலையில் கலைஞர் கருணாநிதி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜனாதிபதி திரவுபதி முர்மு, ஜூன் 5க்கு பதிலாக ஜூன் 15ம் தேதி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Post a Comment