டாப் ஹீரோக்களை கவர்ந்த டைரக்டர்கள் என்றால் குறிப்பிட்டு சொல்லும் படியாக சில பேர் தான் இருக்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காகவே அந்த இயக்குனர்களின் படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் உட்பட பல நடிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட சில இயக்குனர்கள் முன்னணி ஹீரோக்களின் சாய்ஸாக இருக்கின்றனர். அப்படி அனைவரும் விரும்பும் ஒரு இயக்குனர் தான் வெற்றிமாறன்.
தன்னுடைய எதார்த்தமான படைப்புகளின் மூலம் தேசிய விருது உட்பட பல விருதுகளை தட்டி தூக்கி இருக்கும் இவர் சமீபத்தில் வெளிவந்த விடுதலை மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
அதைத்தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திற்காகவும் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்காகவே பல நடிகர்களும் போட்டி போட்டு வருகிறார்களாம்.
அதில் தனுஷ் வடசென்னை இரண்டாம் பாகத்திற்காக வருட கணக்கில் காத்திருக்கிறார்.
அது மட்டுமல்லாமல் சூர்யா கூட வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பதற்காக வரிசையில் நிற்கிறார். இப்படி எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் காத்திருக்க வேண்டும் என்ற ஒரு இடத்தில் தான் வெற்றிமாறன் இருக்கிறார். அந்த வகையில் விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருக்கும் இதே நிலைமை தானாம்.
இப்படி ஒரு கொள்கையோடு இருக்கும் வெற்றிமாறன் எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் மசியாதவர்.
எனக்கு கதையின் தரம் தான் முக்கியம். அதற்காக எத்தனை வருடங்கள் வேண்டுமானாலும் காத்திருந்து படம் எடுப்பேன் என்று தைரியமாக இவர் கூறி வருகிறார். இதுவே இவருடைய படங்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
தரமான முதற்தர வானொலி கேட்க ஸ்கான் செய்யவும்
மேலும் அவருடைய திரைப்படங்கள் வருடங்கள் கடந்தாலும் நிலைத்து நிற்பதற்கும் வெற்றிமாறன் ஒருவரே காரணமாக இருக்கிறார்.
அந்த வகையில் தயாரிப்பாளர்கள் அடுத்தடுத்த படங்களுக்காக இப்பவே அட்வான்ஸ் தொகை கொடுக்க முன் வந்தாலும் இவர் வேண்டாம் என்று கூறி விடுகிறாராம்.
இதன் மூலம் அவர் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment