இத்தனை ஆண்டுகளாக கோலிவுட்டில் டாப் நடிகையாக கலக்கிக் கொண்டிருந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, திருமணத்திற்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கிறார். இதனால் 40 வயதில் தன்னுடைய வெற்றிக்காக முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
நயன்தாரா, மற்ற ஹீரோயின்கள் பொறாமைப்படும் அளவுக்கு பல ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்து மிரட்டிக் கொண்டிருந்த நிலையில், சமீப காலமாகவே அவருக்கு இறங்கு முகமாக உள்ளது. இதனால் மிகவும் கவலையில் காணப்படுகிறார். இவர் நடிக்கும் படங்களில் மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், அதை சரி செய்ய ஏகப்பட்ட பரிகாரங்களை பல்வேறு கோவில்களில் செய்து வருகிறார்.
இவர் நீண்ட நாட்களாக காதலித்த இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை கடந்த ஆண்டு பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டார். இதனால் யார் கண் பட்டுச்சோ என்னவோ, எந்த பேச்சுலர் கொடுத்த சாபமா தெரியவில்லை, தொடர்ந்து நயன்தாராவிற்கு சரிவு தான். இதனால் கணவன் மற்றும் மனைவி இருவரும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
அதனை கலைய என்ன செய்ய வேண்டும் என சமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் பூர்வீகமான கேரளாவிற்கு சென்று ஜோதிடர் ஒருவரை சந்தித்து வந்திருக்கிறார்கள். அப்போது அவர் கண் திருஷ்டி அதிகமாகிவிட்ட நிலையில் அதனை எல்லாம் சரி செய்ய சில பரிகாரங்களை செய்ய வேண்டும் என்றும் கூறினார். இதனால் கோயில் கோயிலாக நயன்தாராவும் தன்னுடைய கணவருடன் சென்று வருகிறார். அதே சமயம் நியூமராலஜி விஷயத்திலும் நம்பிக்கை கொண்ட நயன்தாரா, தனது பெயரை சினிமாவுக்கு வரும்போதே மாற்றிக் கொண்டார்.
அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட காதலர் பெயரிலும் ஸ்பெல்லிங் மாற்றங்களை செய்தார். அது மட்டுமல்ல தனது குழந்தைகளுக்கும் நியூமராலஜி முறைப்படி பெரிதாக இருந்தாலும் அதைத்தான் வைப்பேன் என்று ‘ உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன்’ என்ற பெயர்களை அடம் பிடித்து வைத்தார். இந்நிலையில் தற்போது அந்த ஜோதிடர் அறிவுரைப்படி, நயன்தாரா இன்னும் ஒரு முறை தன்னுடைய பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறார்.
பெயர் என்றால் மாறுபட்ட பெயர் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது இருக்கும் பெயரிலேயே ஒரு சில எழுத்துக்களை மட்டும் மாற்றினால் போதும். அதாவது சில ஸ்பெல்லிங் கரெக்சன் செய்தால் பழையபடி அதிர்ஷ்ட தேவதை வீட்டுக் கதவை தட்டும் என்று ஆசை காட்டி இருக்கிறார்.
இதற்காக நயன்தாராவும் தன்னுடைய பெயரில் கூடுதலாக ஒரு எழுத்தை சேர்த்தோ அல்லது ஒரு எழுத்தை குறைத்தோ மீண்டும் தன்னுடைய பெயரை மாற்றி அமைக்கும் முடிவில் இருக்கிறார்.
மேலும் இவர் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிற்கு என்ட்ரி கொடுப்பதால் ஜோதிடர் சொல்வது போல் செய்தால் தான் ஹிந்தியில் தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்த வேண்டும் என்று கனவுடன் அந்த வேலையில் தீவிரம் காட்டுகிறார்.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment