இலங்கையில் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்காக தேவையான கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் நீதியமைச்சருக்கும், பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் கட்டுப்படுத்தல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் இணைந்து செயற்பட பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அனுராதபுரம் விமானப்படை முகாமில் முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்பு பிரதானிகள் மத்தியில் விசேட உரை ஒன்றை நிகழ்த்தும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.
முப்படையினர், பொலிஸாருக்கு விவசாயம் பற்றிய அறிவை வழங்கி பயிர் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தும் அவசியம் காணப்படுகிறது.
தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்களின் பயனை பெற இன்னும் 25 வருடங்கள் செல்லும். நாட்டின் எதிர்கால சந்ததிக்கும் அது நன்மையை ஏற்படுத்தும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment