இயக்குனர் மணிரத்னம் இந்திய சினிமாவில் புகழ்வாய்ந்த இயக்குனர்களில் ஒருவர். மணிரத்னம் படங்கள் என்றாலே ஹிட் என்றுதான் சினிமா ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
ஆனால் இவர் நிறைய தோல்வி படங்களையும் கொடுத்திருக்கிறார். இவருடைய படங்களை பொருத்தவரைக்கும் பாடல்கள் மற்றும் காதல் காட்சிகள் ரசிகர்களிடையே வெற்றி பெற்று விடுவதால் மேம்போக்காக பார்க்கும் பொழுது எந்த படமும் தோல்வி படம் போல் யாருக்கும் தெரியாது.
ராவணன்: கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் தமிழில் நடித்த திரைப்படம் ராவணன். மேலும் மணிரத்னமும் தன்னுடைய சில இந்தி படங்களை முடித்துவிட்டு தமிழுக்கு மீண்டும் திரும்பினார். இதனால் இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது. ராமாயண கதையின் ஒரு பகுதியை தழுவலாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது.
காற்று வெளியிடை: தன்னிடம் உதவி இயக்குனராக இருந்து நடிகரான கார்த்தி சிவகுமாரை வைத்து மணிரத்னம் இயக்கிய திரைப்படம் தான் காற்று வெளியிடை. இந்த படத்தை அவர் எழுதி, இயக்கி தயாரித்திருந்தார். தன்னுடைய வழக்கமான காதல் கதையை வேறொரு பரிமாணத்தில் மணிரத்னம் சொல்லி இருந்தாலும் இந்த படம் தோல்வி அடைந்தது.
கடல்: கார்த்திக் மற்றும் ராதாவின் வாரிசுகளான கௌதம் கார்த்திக் மற்றும் துளசி நாயரை மணிரத்னம் தன்னுடைய கடல் திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். மேலும்
இதில் நடிகர்கள் அரவிந்த்சாமி மற்றும் அர்ஜுன் இணைந்தது படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. ஆனால் படத்தின் பாடல்கள் வெற்றி பெற்ற அளவுக்கு படம் வெற்றி பெறவில்லை.
யுவா: தமிழில் நடிகர்கள் மாதவன், சூர்யா, சித்தார்த்தை வைத்து மணிரத்னம் ஆயுத எழுத்து எனும் திரைப்படத்தை இயக்கினார். அதே நேரத்தில் இந்த படம் இந்தியில் யுவா என்ற பெயரில் இயக்கப்பட்டது. இதில் அபிஷேக் பச்சன், விவேக் ஓபராய் போன்றவர்கள் நடித்தனர். இந்த படம் தமிழில் வெற்றி பெற்றாலும் இந்தியில் படுதோல்வி அடைந்தது.
இருவர்: தமிழக அரசியலில் இரு பெரும் துருவங்கள் ஆன எம்ஜிஆர் மற்றும் கருணாநிதிக்கு இடையே இருந்த உறவை தழுவலாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இருவர்.
படத்தின் கதை நன்றாக இருந்தும் பேமிலி ஆடியன்ஸ்களின் கவனத்தை ஈர்க்காததால் தோல்வியை தழுவியது. ஆனாலும் இந்த படம் இன்றுவரை மணிரத்னத்துக்கு ஒரு அடையாளமாக இருக்கிறது.
உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை அழுந்துங்கள்
Download
AKSWISSTAMILFM APPS android
AKSWISSTAMILFM APPS IPHONE
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
உலக செய்திகள் சினிமா விளையாட்டு அரசியல் செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த ஆப்ஸை தரவிறக்கம் செய்யவும் 👉
www.akswisstamilmedia.com
https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment