யூடியூப் பார்த்து குழந்தை பெற்றுக்கொண்ட 15 வயது சிறுமி

 



அன்றாடம் பல சம்பவங்களை நாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். சில சம்பவங்கள் நம்மை சந்தோஷமாகவோ, கவலையாகவோ மாற்றிவிடும். ஆனால், ஒரு சில சம்பவங்கள் நம்மை கோபத்துடனான வியப்பில் ஆழ்த்தி, “இப்படியும் நடக்குமா?”என்று சிந்திக்க வைக்கும்.

அப்படியொரு சம்பவம் தான் மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்துள்ளது.

15 வயதான சிறுமியொருவருக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக ஆண் நண்பர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்ததில் சிறுமி கர்ப்பமடைந்துள்ளார்.

வீட்டிலுள்ளவர்களுக்கு இதுகுறித்து தெரிய வந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும் என்ற பயத்தில் தனது கர்ப்பத்தை மறைத்து தனியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளையும் மேற்கொண்டு வந்துள்ளார்.

பிரசவத்துக்கான நேரம் நெருங்க நெருங்க, மருத்துவமனைக்குச் சென்றால், இந்த விடயம் வெளியில் தெரிந்துவிடுமோ எனப் பயந்து தனக்குத்தானே பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார். அதற்கு அவர் தெரிவு செய்தது யூடியூப் வலைத்தளத்தை.

கடந்த மார்ச் 2ஆம் திகதி குறித்த சிறுமிக்கு பிரசவ வலி வரவே, யூடியூப்பில் பிரசவ வீடியோக்களை பார்த்து, சுயமாக பிரசவம் பார்த்து ஒரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை மறைப்பதற்காக தனக்குப் பிறந்த குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்று, உடலை வீட்டிலுள்ள ஒரு பெட்டியில் மறைத்து வைத்துள்ளார். சிறுமியின் தாய் வீடு திரும்பியதும் தனது மகள் பலவீனமாக இருப்பதைப் பார்த்துவிட்டு, விசாரித்துள்ளார்.

உலகின் தரமான தமிழ் வானொலி கேட்கவேண்டுமா தரமான பாடல்கள் சிறந்த அறிவிப்பாளர்களால் தொகுத்து வழங்கபடும் நிகழ்ச்சிகளை கேட்க இந்த லிங்கை  அழுந்துங்கள்

www.akswisstamilfm.com 

Download

AKSWISSTAMILFM APPS android  


AKSWISSTAMILFM  APPS IPHONE



#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

https://play.google.com/store/apps/details?id=akswisstamil.media

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Akswisstamilfm - YouTube

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial