அஜித் - விஜய் படங்களான துணிவும், வாரிசும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி பட்டையை கிளப்பி வருகின்றன.
ஹவுஸ்புல் காட்சிகள், ரசிகர்கள் கொண்டாட்டம் என திரையரங்குகள் திருவிழா போல காட்சியளிக்கிறது.
இந்த இரண்டு படங்களில் அதிக கலெக்ஷனை எந்தப்படம் அள்ளப்போகிறது என்பது தான் ரசிகர்களுக்கு இருக்கும் ஒரே கவலை.
இந்தச்சூழலில் அஜித் - விஜய் சினிமா பயணத்தில் இவர்கள் இருவரின் படங்களும் இதற்கு முன் ஒன்றாக வெளியானது எப்போது? அந்தப்படங்களில் வெற்றி மகுடம் சூடியது யார் என்பதை தற்போது பார்க்கலாம்.
1996 தான் விஜய் சினிமா வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டு. என்ன தான் இதற்கு முன் விஜய் பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த ஆண்டு வெளியான பூவே உனக்காக படம் தான் விஜய்யை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.
சொல்லப்போனால் விஜய்யின் முதல் பிளாக்பஸ்டர் படமும் இது தான். விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் அமைதியான ரோலில் நடித்து பெண்களின் பேவரைட் நாயகனாக விஜய் மாறினார்.
இந்தப்படம் வெளியான அதே நாளில் தான் அஜித்தின் கல்லூரி வாசல் படமும் வெளியானது. பிரசாந்த் இந்தப்படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். ஆனால் இந்தப்படம் பிளாப் ஆனது. பூவே உனக்காக படம் 250 நாட்கள் வெற்றிகரமாக தியேட்டரில் ஓடியது.
1997-ம் ஆண்டு அஜித்தின் ரெட்டை ஜடை வயசும், விஜய்யின் காதலுக்கு மரியாதை படமும் ஒரே நாளில் வெளியானது. இதில் ரெட்டை ஜடை வயசு படம் தோல்வியடைந்தது.
ஆனால் காதலுக்கு மரியாதை படம் மெகா ஹிட் ஆனது. இந்தப்படம் விஜய்யின் மார்க்கெட்டை பல மடங்கு உயர்த்தியது. இப்போது வரை தமிழில் வெளியான பெஸ்ட் காதல் படங்களில் நிச்சயம் இந்தப்படத்துக்கு ஸ்பெஷல் இடமுண்டு.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment