'எமர்ஜென்சி' படத்துக்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக நடிகை



மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்துக்காக தனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்ததாக நடிகை கங்கனா தெரிவித்துள்ளார். 

தமிழில் 'தாம்தூம்', ஜெயலலிதா வாழ்க்கை கதையான 'தலைவி' படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத், இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார். 

தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் 'எமர்ஜென்சி' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அவரே இயக்குகிறார். இந்திரா காந்தி - கங்கனா ரணாவத் இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். 

இந்நிலையில் இப்படம் குறித்து கங்கனா ரணாவத் கூறும்போது, "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடித்து விடவில்லை. 

படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை. உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழையுங்கள்'' என்று கூறியுள்ளார். 

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈

 https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab   👈👈

 Akswisstamilfm - YouTube

#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial