தனித்து போட்டியிடுவது மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் .


 தனித்து போட்டியிடுவது  மாவீரர்களுக்கு இழைக்கின்ற துரோகம் என்கிறார் நாவலன் . 


எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில்  தனித்து போட்டியிடுவது என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுவில் எடுக்கப்பட்ட  தீர்மானம் தவறானது மாத்திரமல்ல  அத் தீர்மானம்  தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக  தமது இன்னுயிரை  துறந்த  மாவீரர்களுக்கும் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரனின் விருப்பத்திற்கும் துரோகம் இழைக்கின்ற செயற்பாடாகவே நாங்கள் கருதுகின்றோம் .  அனைத்து தமிழ்த்தேசிய கட்சிகளும் எதிர்வருகின்ற அனைத்து தேர்தல்களிலும்  இணைந்து போட்டியிட்டு எமது உரிமைகளை வென்றெடுக்கவேண்டும் என்று  இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி கிளை செயலாளரும்  வேலணை பிரதேச சபை உறுப்பினருமான  கருணாகரன் நாவலன் வேண்டுகோள் விடுத்துள்ளார் . 


மேலும் அவரது அறிக்கையில்   தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தினை  சாணக்கியன் ராகுல புத்திரவின் இல்லத்தில் நடாத்தியது பாரிய தவறென்றும்  நல்லையா வீதி மட்டக்களப்பு நகரிலேயே  கட்சியின் பிரதான அலுவலகம் நீண்டகாலமாக இயங்கிவருகின்ற  நிலையில்  தனிப்பட்ட ஒரு நபரின் இல்லத்தில்  மேற்படி முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தினை நடாத்துவதற்கு அனுமதியளித்திருக்கக்கூடாதென்றும் தெரிவித்துள்ளார் . இதே சாணக்கிய ராகுல புத்திர  கடந்த காலங்களில்  தமிழ்த்தேசிய கூட்டமைப்பினையும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியையும் மிக மோசமாக விமர்சித்ததையும் தமிழ் அரசுக் கட்சியின் விசுவாசிகள்  மறந்துவிடவில்லையென்றும் குறிப்பிட்டுள்ளார் .

உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

Akswisstamilfm - YouTube

புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial