தனுஷ் 50' படத்தில் இந்த நடிகையா.?:
தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ். நடிப்பதோடு மட்டும் இல்லாமல் இயக்கம், பாடல்கள் எழுதுவது என திரைத்துறையில் பல் தளங்களில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இயக்கத்தில் இறங்கியுள்ளார் தனுஷ்.
தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பிற மொழி படங்களிலும் கலக்கி வருகிறார் தனுஷ்.
கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் வெளியானது. இதில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் பாரதிராஜா, பிரகாஷ் ராஜ், நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் பேமிலி டிராமா படமாக வெளியான 'திருச்சிற்றம்பலம்' 100 கோடியை கடந்து வசூல் சாதனை செய்தது.
இதனையடுத்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ‘நானே வருவேன்’ படத்தில் நடித்தார் தனுஷ். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ், செல்வராகவன், யுவன் ஒரே படத்தில் இணைந்தது ரசிகர்கள் மத்தியில் உச்சக்கட்ட எதிர்பாப்பினை கிளப்பியது.
'பொன்னியின் செல்வன்' படத்திற்கு போட்டியாக வெளியான 'நானே வருவேன்' படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ராக்கி, சாணிக்காயிதம் போன்ற ராவான படங்களை இயக்கிய அருணுடன் முதன்முறையாக தனுஷ் இணைந்துள்ளார்.
ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்தப்படத்தில் பிரியங்கா அருள் மோகன், சந்தீப் கிஷன், நிவேதிதா சதீஷ், ஜான் கொக்கன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈
https://play.google.com/store/apps/details?id=akswisstamilfm.aplirab 👈👈
Akswisstamilfm - YouTube
#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்
Post a Comment