தமிழில் ‘தாம்தூம்’, ஜெயலலிதா வாழ்க்கை கதையான ‘தலைவி’ படங்களில் நடித்து பிரபலமான கங்கனா ரணாவத் ஹந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தி, இதனால் வழக்குகளையும் சந்திக்கிறார்.
சமீபகாலமாக பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் பேசி வரும் கங்கனா, தற்போது மறைந்த பிரதமர் இந்திராகாந்தி வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘எமர்ஜென்சி’ படத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை அவரே இயக்குகிறார்.
கங்கனா ரணாவத் இந்திரா காந்தி ஆட்சியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை படத்தில் காட்சிப்படுத்த உள்ளனர். அவரை பற்றிய சர்ச்சை கருத்துகள் படத்தில் இடம்பெறலாம் என்ற பேச்சும் உள்ளது.
இந்திராகாந்தி தோற்றம் ஏற்கனவே வெளியாகி வைரலானது.
இந்நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் ‘எமர்ஜென்சி’ படப்பிடிப்பை நடத்த கங்கனா ரணாவத் திட்டமிட்டு உள்ளார்.
இதற்கான அனுமதியை கேட்டு நாடாளுமன்ற செயலாளருக்கு கங்கனா கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்தில் பொதுவாக படப்பிடிப்பு நடத்துவது இல்லை.
கங்கனா அனுமதி கேட்டு இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment