சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமிக்ரொன் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அமுல்படுத்தியும், தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.
சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் 2 பேருக்கம், ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இலங்கையைப் பொருத்த வரையில் இன்னும் ஆபத்தான புதிய வகை கொரோனா வைரஸ் அடையாளம் காணப்படாத நிலையில் மீண்டும் ஒரு பெருந்தொற்றுப் பரவல் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், புதிய வகையான பெரும் ஆபத்துமிக்க கொரோனா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கு சாத்தியங்கள் இருப்பதாக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக பேராசிரியரும், துறைசர்ந்த நிபுணருமான நீலிகா மாலவிகே எச்சரித்துள்ளார்.
எனவே இலங்கையும் கொரோனா பரவல் தொடர்பாக அவதானமாக இருப்பதே சிறந்தது என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
எவ்வாறாயினும், இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மற்றுமொரு பொதுமுடக்கம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகக்குறைவாகவே காணப்படுவதாக சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்..
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி www.Akswisstamilfm.com
https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm.
https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing #akswisstamilmedia #akswisstamiltv
புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்


Post a Comment