தளபதி 67 படத்தின் பூஜை.. விரைவில் சூட்டிங்!

 


நடிகர் விஜய்யின் வாரிசு படம் வரும் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் மிகச்சிறந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தப் படத்தை தொடர்ந்து ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த தளபதி 67 படத்தின் பூஜை இன்றைய தினம் போடப்பட்டுள்ளது.

சென்னையில் மிகவும் எளிமையான முறையில் தளபதி 67 படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. விரைவில் சூட்டிங் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. 

இந்தப் படம் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள நிலையில் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 முன்னதாக வெளியான ரஞ்சிதமே பாடல் 100 மில்லியன் வியூஸ்களை நோக்கி நடைபோட்டு வருகிறது.

இதனிடையே விஜய்யின் 30 ஆண்டு திரைப்பயணத்தை கொண்டாடும்வகையில் நேற்றைய தினம் தீ தளபதி பாடல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. 

வெளியான சில நிமிடங்களிலேயே ஏராளமான வியூஸ்களை பெற்று இந்தப் பாடல் சாதனை படைத்துள்ளது. நடிகர் சிம்பு இந்தப் பாடலை பாடியுள்ள நிலையில், பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இதேபோல இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானவுடன் இந்தப் படம் லோகேஷ் யூனிவர்சில் இணையுமா என்பது குறித்து அப்டேட் கொடுக்கவுள்ளதாக முன்னதாக லோகேஷ் தெரிவித்த நிலையில், விரைவில் அதுகுறித்து அவர் அப்டேட் கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க

உங்கள் நேரத்திற்கு ஏற்றால் போல் 24 மணி நேர இசை பயணத்தில் இனைந்து இருங்கள் உங்களுக்கு பிடித்த பாடல்கள் நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி   www.Akswisstamilfm.com 

 https://apps.apple.com/us/app/akswiss-tamil-fm/id1607446642?platform=iphone👈👈#akswisstamilfm. 

  https://play.google.com/store/apps/details?id=com.zendroid.akswiss 👈👈#akswisstamilfm #skiing  #akswisstamilmedia  #akswisstamiltv

  புதிய அறிவிப்பாளர்கள் புதிய புதிய நிகழ்ச்சிகளை கேட்டு ரசித்த படி இனைந்து மகிழுங்கள்

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial