சுவாரஷ்யமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் சமந்தா தற்போது கதையின் நாயகியாக நடித்திருக்கும் திரைப்படம் தான் யசோதா.
இந்தப் படத்தில் சமந்தா வாடகைத்தாய் கான்செப்ட்டை மையமாகக் கொண்டு நடித்திருக்கிறார்.
என்னதான் இந்தப் படத்தில் சமந்தா பணத்திற்காக வாடகை தாயாக நடித்திருந்தாலும் சில விஷயத்தை இந்த படத்தில் டீசன்டாகவும் சொல்லி இருக்கின்றனர்.
இதில் சமந்தா லீட் ரோலில் நடித்திருக்கிறார். இவருடன் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராம் ரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிகிறது. மேலும் மூன்றே நாட்களில் யசோதா 20 கோடியை பாக்ஸ் ஆபிஸில் குவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தில் நடிக்கும் போது சமந்தா மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும், படத்திற்கு கிடைக்கும் வெற்றியை பார்க்கும் போது புத்துணர்ச்சி அடைந்துள்ளார்.
எனவே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியான யசோதா படத்திற்கு முன்பே வெளியான லவ் டுடே படம் தற்போது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி இளசுகளின் மனதைக் கவர்ந்த படம் லவ் டுடே. ஜெயம் ரவியின் கோமாளி படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார்.
பாக்ஸ் ஆபிஸில் மோதிக்கொள்ளும் இந்த இரண்டு படங்களும் இந்தியாவில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் ரசிகர்களிடம் நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது.
லவ் டுடே படம் வெளியாகி 5 நாட்களில் 20 கோடியை குறித்த நிலையில், யசோதா வெறும் மூன்றே நாட்களில் அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது.
அதுமட்டுமின்றி இதுவரை 10 நாட்களில் 50 கோடி வசூலை வாரி குவித்திருக்கும் லவ் டுடே படத்திற்கு யசோதா இனிவரும் நாட்களில் கடும் போட்டியாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.
Post a Comment