ரிஷி சுனக்கின் அதிரடி முடிவு! வெளிநாட்டு மாணவர்களுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

 


பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வெளிநாட்டு மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சமீபத்தில் தேசிய புள்ளியியல் அலுவலகம் புலம் பெயர்ந்தோர் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது.

அதில் கடந்த 2021ம் ஆண்டு 1.73 லட்சமாக இருந்த புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையானது இந்த ஆண்டு 5.04 லட்சமாக உயர்ந்துள்ளது. சுமார் 3.31 லட்சம் பேர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையில் உயர்வு


குறிப்பாக சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கை உயர்வே இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதற்காக வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையை குறைப்பது உட்பட அனைத்து வழிமுறைகளையும் மேற்கொள்வதற்கு பிரதமர் ரிஷி சுனக் திட்டமிட்டுள்ளதாக பிரதமரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாணவர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களில், உயர்நிலை பல்கலைக்கழகங்களில் சர்வதேச மாணவர்கள் சேர்க்கையை கட்டுப்படுத்துவதும், மாணவர்களை சார்ந்தவர்களுக்கான விசாக்களை கட்டுப்படுத்துவதும் அடங்கும்.

அதே நேரத்தில் அதிக கட்டணம் செலுத்தும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டால், பல்கலைக்கழகங்களில் நிதியுதவி வெகுவாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சர்வதேச மாணவர்களை நாட்டின் குடியேற்ற புள்ளிவிவரங்களில் இருந்து நீக்குமாறு இந்திய சமூகம் தலைமையிலான மாணவர்கள் அமைப்பு பிரித்தானிய அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

"தற்காலிகமாக பிரித்தானியாவில் இருக்கும் மாணவர்களை புலம்பெயர்ந்தவர்களாகக் கருதக்கூடாது. சர்வதேச மாணவர்கள், இதில் இந்தியர்கள் மிகப்பெரிய கூட்டாளிகள், பிரித்தானிய பொருளாதாரத்தில் GBP 30 பில்லியன் நிகர வருவாயைக் கொண்டு வருகிறார்கள்" என்று தேசிய இந்திய மாணவர்களின் தலைவர் சனம் அரோரா தெரிவித்துள்ளார்.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial