இந்தியப் பெருங்கடலின் முக்கிய வர்த்தக மையங்களில் ஒன்றாக இலங்கை உள்ளதென வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இந்தியப் பெருங்கடல் எல்லையிலுள்ள நாடுகள் அமைப்பின் மாநாடு பங்களாதேஷில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.
இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதார மற்றும் வர்த்தக நலன்களை பரஸ்பரம் முன்னேற்றுவதற்கும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கும் இந்து சமுத்திர எல்லையிலுள்ள நாடுகளுடன் தீவிரமாக ஈடுபடுவதன் முக்கியத்துவத்தையும் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
இந்து சமுத்திரப் பிராந்தியம் தொடர்பான விடயங்களில் இலங்கையின் அர்ப்பணிப்பு இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் வெளிநாட்டுக் கொள்கையின் முக்கிய அடித்தளங்களில் ஒன்றாக உள்ளது என்றும் அவர் மேலும் வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் தரமான முதல் தர வானொலி கேட்க
Post a Comment