பார்த்திபனுக்கு எதிராக ப்ளூ சட்டை மாறன் டுவிட்

 


ப்ளூ சட்டை மாறன் தனது யூடியூப் சேனல் மூலம் பல படங்களை விமர்சனம் செய்து வருகிறார். 

இவர் பல பெரிய நடிகர்கள் பற்றி எந்த பயமும் இல்லாமல் தொடர்ந்து மோசமான கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் இரவின் நிழல். இந்த படத்தை பார்த்திபன் நான் லீனியர் படமாக சிங்கிள் ஷாட்டில் எடுத்துள்ளார். 

மேலும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

பார்த்திபன் உலகிலேயே முதல் சிங்கிள் சாட்டில் எடுத்த படம் இரவின் நிழல் எனக் கூறி பிரமோஷன் செய்திருந்தார். 

அதற்கு ப்ளூ சட்டை மாறன், 2013 ஆம் ஆண்டு வெளியான ஃபிஷ் அண்ட் கேட் என்ற ஈரானிய படம் தான் முதலில் சிங்கிள் சாட்டில் எடுத்தது என குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் இதற்கு பார்த்திபன் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இப்போது அமேசான் பிரைம் நிறுவனமே இது இரண்டாவது சிங்கள் சாட்டில் எடுக்கப்பட்ட படம் என குறிப்பிட்டுள்ளதால் ப்ளூ சட்டை மாறன் பார்த்திபனை வச்சு செய்துள்ளார்.

அதாவது வாய் வெல்லாது, வாய்மை தான் வெல்லும் என மாறன் குறிப்பிட்டுள்ளார். சும்மாவே ஆடும் குதிரைக்கு சலங்கை கட்டி விட்டால் எப்படி ஆடும் என்பது போல ப்ளூ சட்டை மாறன் தற்போது வாய் இருந்தால் மட்டும் ஜெயித்திட முடியாது உண்மைதான் ஜெயிக்கும் என பார்த்திபனுக்கு எதிராக பதிவு போட்டுள்ளார்.



Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial