இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.
மிகவும் மாறுப்பட்ட கதைகளத்தை கொண்ட இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. மேலும் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகர் பாபி சிம்ஹாவிற்கு தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றுடன் இப்படம் வெளியாகி 8 வருடங்கள் ஆகியுள்ளது, இதனை கொண்டாடும் வகையில் இணையத்தில் #8yearsofJigarthanda ஹாஷ்டேக் உடன் பதிவுகளை வெளியிட்டு வந்தனர்.
இதற்கிடையே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் #8yearsofJigarthanda ஹாஷ்டேக் உடன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவின் மூலம் ஜிகர்தண்டா திரைப்படம் உருவாக இருப்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.
Post a Comment