உத்தவ் போல ஸ்டாலினுக்கும் நெருக்கடியா? பாஜக பிரமுகரின் பகீர்!

 

உத்தவ் போல ஸ்டாலினுக்கும்  நெருக்கடியா? பாஜக பிரமுகரின் பகீர்!

உத்தவ் போல ஸ்டாலினுக்கும்  நெருக்கடியா? பாஜக பிரமுகரின் பகீர்!

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான  ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சிவசேனா தலைவரும் அம்மாநில முதல்வருமான  உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அம்மாநில அரசின் நிலைத் தன்மையில் பாதிப்பு ஏற்பட்டு உத்தவ் தாக்கரே முதல்வர் பதவியில் இருந்து அகற்றப்படும் நிலையில் உள்ளார்.  

அமைச்சர்கள் உள்ளிட்ட 16  சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் ஆதரவுடன் சிவசேனா பாலாசாஹிப் என்ற புதிய கட்சியையும் அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தொடங்கப் போவதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் தமிழக பாஜகவின் முன்னாள் மாநில இளைஞரணிச் செயலாளரும், தற்போதைய மாநிலச் செயலாளருமான வினோஜ் பி. செல்வம் தனது சமூக தளப் பக்கத்தில் இன்றுஇ (ஜூன் 26) வெளியிட்ட ஒரு தகவல் அரசியல் அரங்கில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.

 “ தகுதியற்ற வாரிசுகளை முன்னிறுத்தியதால் சரிந்த,  சரியப் போகும் கட்சிகள்... நேற்று அகாலி தளம், இன்று சிவசேனா, நாளை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, நாளை மறுநாள் திமுக” என்பதுதான் அவரது பதிவு.இதன் மூலம் தன்னைக் கடுமையாக எதிர்த்து ஆட்சி நடத்தி வரும் உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவ், மு.க.ஸ்டாலின் ஆகியோரை  வரிசையாக ஆட்சியில் இருந்து அகற்றும் அளவுக்கு நெருக்கடி தர பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஏற்கனவே ஏற்பட்ட குழப்பங்களைக் கடந்து சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து அரசு அமைத்தன. இந்நிலையில் சிவசேனாவின் மூத்த தலைவரும் மகாராஷ்டிர அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்களை அணி திரட்டினார்.

சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி தேர்தலுக்குப் பின் ஆட்சி அமைத்ததை சிவசேனாவுக்குள் இருக்கும் இந்துத்வ ஆதரவாளர்கள் விரும்பவில்லை. மேலும் மாநிலம் எங்கும் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரோடு சிவசேனா நிர்வாகிகளுக்கு ஒத்துப் போகவில்லை. அவர்கள் தங்களது தலைவரும் முதல்வருமான  உத்தவ் தாக்கரேவுக்கு இதுபற்றி பல தகவல்கள் அனுப்பியும் அவரை சென்று சேராமல்  சஞ்சய் ராவத், உத்தவின் மகன் ஆதித்ய தாக்கரே ஆகியோர் பார்த்துக் கொண்டார்கள். 

இந்த நிலையில்தான் கடந்த ஜூன்  10 ஆம் தேதி  நடந்த மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் சிவசேனாவின் வேட்பாளாரும், உத்தவின் நெருங்கிய ஆலோசகருமான  சஞ்சய் ராவத் ஜெயித்தபோது, இன்னொரு சிவசேனா வேட்பாளர் சஞ்சய் பவார் தோற்றார்.  இதற்கு காரணம் கட்சியின் முக்கிய தலைவர் ஏக்நாத் ஷிண்டேதான் என குற்றம் சாட்டப்பட்டது. சில தினங்களில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் 44 எம்.எல்.ஏ.க்களில் சுமார் முப்பதுக்கும் மேற்பட்டோரை தன் கட்டுப்பாட்டில்  வைத்திருப்பதாக தகவல்கள் வந்தன.  அவர்களில் 15 எம்.எல்.ஏ.க்கள் தற்போது பாஜக ஆளும் அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் குவஹாத்தியில் ஒய் பிரிவு பாதுகாப்போடு  இருப்பதாக தகவல்கள் வருகின்றன.  சிவசேனாவின் அதிருப்தி தலைவர் ஏக்நாஷ் ஷிண்டே, ‘சிவசேனா பாலாசாஹிப்    (பாலா சாஹிப் என்றால் சிவசேனாவின் நிறுவனர் பால் தாக்கரே) என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

இந்த சூழலில்தான்.. தமிழக பாஜக பிரமுகர் வினோஜ் பி. செல்வம் தற்போது மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள நிலை நாளை தெலங்கானாவிலும் நாளை மறுநாள் தமிழ்நாட்டிலும்  நடக்கும் என்று எச்சரித்திருக்கிறார்.

பாஜகவின் பல பூதாகரங்கள் இதுபோல சாதாரண சமூக தளப் பதிவில்தான் ஆரம்பித்திருக்கின்றன.  அந்த வகையில் தமிழகத்தில் நடக்கும் திமுக ஆட்சியை நிலைகுலைய வைக்க பாஜக முயற்சிக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து வினோஜ் பி. செல்வத்திடமே பேசினோம்.

 “மகாராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைமைக்கும் பாஜக காரணமில்லை. தமிழ்நாட்டிலும் பாஜக அவ்வாறு முயற்சிக்கப் போவதில்லை. சிவசேனாவின் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று கவனித்தீர்களா? ‘நாங்கள் யாரும் முதல்வரின் வீட்டுக்கே செல்ல முடியவில்லை. முதல்வரிடம் எந்த தகவலையும் தெரிவிக்க முடியவில்லை. எல்லாமே அவரது மகன் ராஜ்யம்தான் என்கிறார்கள். தமிழ்நாட்டிலும் கிட்டத்தட்ட அதே நிலைமைதான்.  தமிழகத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் என்ன, அமைச்சர்களே கூட முதல்வரை நினைத்தவுடன் சந்திக்க முடியவில்லை. இங்கே மகன் கேம்ப், மருமகன் கேம்ப் என்று இரண்டு கேம்ப் உள்ளது. இவற்றைத் தாண்டி முதல்வரை திமுகவின் முக்கியஸ்தர்களால் கூட நெருங்கமுடியவில்லை என்பதை திமுகவினரே சொல்கிறார்கள். தன்மானத்தை விட்டு அவர்கள் எத்தனை நாளைக்குத்தான் இருப்பார்கள்? ஏதோ ஒரு பாயின்ட்டில் கொதிநிலையை அடைய மாட்டார்களா?   திமுகவினருக்குள் இருக்கும் உணர்வுகளை அறிந்துதான் இந்த கருத்தை நான் சொன்னேன். மற்றபடி மகாராஷ்டிராவிலும் சரி, தமிழகத்திலும் சரி பாஜக எந்த முன்னெடுப்பையும் மேற்கொள்ளவில்லை” என்று தெரிவித்தார் மாநில செயலாளரான  வினோஜ் பி. செல்வம்.

நெருப்பில்லாமல் புகையாது என்பார்கள். 

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial