சமீபத்தில் வெளியாகி வசூல் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கும் கேஜிஎப் 2 படத்தின் அடுத்த பாகம் உருவாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யாஷ் நடித்து பிரசாத் நீல் இயக்கத்தில் வெளியான படம் கேஜிஎஃப் மற்றும் கேஜிஎஃப் சாப்ட்டர் 2. சமீபத்தில் வெளியான கேஜிஎஃப் 2 மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்த பாகத்திற்கான லீடும் இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் யாஷ் இப்போது இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் நடிகராகியுள்ளார்.
இதையடுத்து இப்போது அவருக்கு நிறைய விளம்பர வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் அதில் பல கோடி ரூபா வருமானம் வரும் புகையிலை சம்மந்தமான நிறுவனம் அணுகியதாகவும், ஆனால் அதில் நடிக்க யாஷ் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதை யாஷின் விளம்பரம் சம்மந்தமானப் பொறுப்புகளை மேற்கொண்டு வரும் நபர் தெரிவித்துள்ளார்.
Post a Comment