கமலின் விக்ரம் படத்தில் இந்த குழந்தை சூர்யா-வா..?

விக்ரம் படத்தின் டிரெய்லரில் இடம்பெறும் இந்தக் குழந்தைதான் சூர்யாவா என்று ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் பேச்சுகள் எழுந்து
வருகின்றன.

         

                               

கமல் – விஜய் சேதுபதி – பஹத் பாசில் ஆகியோர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது விக்ரம் திரைப்படம். இந்த திரைப்படத்தின் ஆடியோ மற்றும் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவுக்கு இடையே விக்ரம் படத்தின் டிரைலர் வெளியானது. இப்போது இணையத்தில் விக்ரம் டிரைலர் ரசிகர்களால் வெகுவாக சிலாகிக்கப்பட்டு வருகிறது. விழாவில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, உதயநிதி ஸ்டாலின், சிம்பு, அனிருத், இயக்குனர் பா ரஞ்சித் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


விக்ரம் திரைப்படத்தில் சூர்யா நடிப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து விக்ரம் நடிகர் கமல்ஹாசனின் மகனாக நடித்து இருக்கிறாரா அல்லது காளிதாஸ் ஜெயராமன் தான் கமல்ஹாசனுக்கு மகனாக நடித்து இருக்கிறாரா? என்று ரசிகர்கள் விக்ரம் திரைப்படத்தின் கதை தொடர்பாக ஆர்வத்துடன் தங்களது எதிர்ப்பார்ப்புகளை பற்றி பேசி வருகின்றனர்

யார் இந்த குழந்தை?...

ட்ரெய்லரின் கடைசி காட்சிகளில் விக்ரம் என்று கமல்ஹாசன் ஒரு பெயரை குறிப்பிடுகிறார். அவர் தன்னைத் தானே குறிப்பிடுகிறாரா? அவருக்கும் இந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம்.? அப்படியானால் இந்த குழந்தைதான் சூர்யாவா? என்று ரசிகர்களிடத்தில் மிகவும் தீவிரமாக ட்ரெய்லர் பற்றிய கலந்துரையாடல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விக்ரம் டிரைலர் முழுக்க முழுக்க ஆக்ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. மொத்த டிரைலரில் துப்பாக்கிகளுக்கு அருகில் இருக்கும் அந்த குழந்தையின் காட்சி வித்தியாசமானதாக அமைந்துள்ளது.


மேலும் இது சம்மந்தமாக இணையத்தில் ரசிகர்கள் கமலின் மகனாக விக்ரம் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கலாம் என்றும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். ஏற்கனவே சூர்யா நடித்த அயன் படத்தில் ‘சூர்யாவின் இறந்து போன அப்பா கதாபாத்திரத்துக்கு கமல்ஹாசனின் புகைப்படத்தைப் பயன்படுத்தி இருப்பார்கள்’ என்பது குறிப்பிடத்தகக்து.

வேறு சில ரசிகர்களோ அந்த குழந்தை பஹத் பாசிலின் குழந்தையாக இருக்கலாம் என்றும் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார். படத்தில் இடம்பெற்றுள்ள போர்க்கண்ட சிங்கம் என்ற பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளை வைத்து இப்படி ஒரு கருத்தையும் சிலர் தெரிவித்து வருகின்றனர். எது எப்படி இருந்தாலும், விக்ரம் படத்தில் அந்த குழந்தை ஒரு முக்கியமான பாத்திரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial