அசால்ட்டாக 50 கோடி வாங்கும் விஜய் சேதுபதி.. உருவாகும் அடுத்தடுத்த புதிய திட்டம்


 அசால்ட்டாக 50 கோடி வாங்கும் விஜய் சேதுபதி.. உருவாகும் அடுத்தடுத்த புதிய திட்டம்


தமிழில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி தற்போது வில்லன், குணசித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பிற்கென ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்து வரும் நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் விஜய்சேதுபதி நடித்து பிஸியாக வலம் வருகிறார்.

இதனிடையே தற்போது விஜய் சேதுபதி தமிழ் திரைப்படங்களை காட்டிலும் வரிசையாக பாலிவுட் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் தமிழில் கிடைக்கும் சம்பளத்தை விட அதிகமாக கிடைப்பதால் அங்குள்ள திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பாலிவுட்டில் என்ட்ரியானால் இந்திய அளவில் விஜய் சேதுபதி பேமஸ் ஆகி விடுவார் என்பதால் அதுவும் ஒரு முக்கிய காரணமாகும் பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழில் விஜய் சேதுபதிக்கு எட்டிலிருந்து பத்து கோடி வரை மட்டுமே சம்பளமாக கிடைத்து வருகிறது. ஆனால் பாலிவுட்டில் விஜய்சேதுபதிக்கு கிட்டத்தட்ட 50 கோடி வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது. இந்நிலையில் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்ற பழமொழிக்கு ஏற்ப விஜய்சேதுபதி நடந்து கொள்வது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


மேலும் விஜய்சேதுபதி ஒரு ஷாப்பிங் மாலை கட்டி வரும் நிலையில் அந்த மாலின் வேலைப்பாடுகளுக்கு அதிகப்பணம் தேவைப்படுவதால் இதுபோன்று சம்பளம் அதிகமாக வாங்கிக்கொண்டு பல மொழி திரைப்படங்களில் நடிப்பதை விஜய்சேதுபதி வாடிக்கையாக வைத்துள்ளார்.

தற்போது ஹிந்தியில் மும்பைக்கார், மேரி கிறிஸ்துமஸ், லால் சிங் சத்தா, உள்ளிட்ட திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மேலும் தளபதி விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பவானி ஆக நடித்த நிலையில், இத்திரைப்படம் நடிகர் ஷாஹித் கபூர் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதிலும் பவானி கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தற்போது உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி விஜய்சேதுபதியின் காட்சிகள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனிடையே இத்திரைப்படத்திற்கு பின் விஜய் சேதுபதி பாலிவுட் படங்களில் நடிப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Post a Comment

Previous Post Next Post

5

5

5

Girl in a jacket Girl in a jacket

5

5

HTML tutorial